திரிஷாவின் Ex காதலருடன் டேட்டிங் செய்தது உண்மை!.. நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்...
2011 -ம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிந்து மாதவி. இதன் பின்னர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்றார். இறுதி சுற்று வரை பிந்து மாதவி முன்னேறினாலும் டைட்டில் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இதையடுத்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் பட்டதை வாங்கினார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிந்து மாதவியிடம் தொகுப்பாளர், நீங்கள் திரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியம் என்பவரை டேட்டிங் செய்தது உண்மையா என்று கேட்டார். இதற்கு பிந்து மாதவி சிரித்து கொண்டே "ஆமாம்" என்று கூறினார்.
நடிகை திரிஷா வருண் மணியனும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு 2015 -ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில தனிப்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.