எஸ்.டி.ஆர் பட நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்.. குஷ்பூவிற்கு பிறகு இவருக்கு தான் அந்த அந்தஸ்து..

எஸ்.டி.ஆர் பட நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்.. குஷ்பூவிற்கு பிறகு இவருக்கு தான் அந்த அந்தஸ்து..

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை நிதி அகர்வால். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்மின்றி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நிதி அகர்வால் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் திரண்டு நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் ஒன்று கட்டியுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் நடிகை குஷ்பூவிற்கு பிறகு நடிகை நிதி அகர்வாலுக்கு தான் ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர் என கூறிவருகின்றனர்.

LATEST News

Trending News