'அடி கட்டழகு கருவாச்சி'.. ஜிவி பிரகாஷின் செம மெலடி பாடல்..!
தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என ஒரே நேரத்தில் பிசியாக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக ’ருத்ரன்’ ’கேப்டன் மில்லர்’ ’தங்கலான்’, ‘வணங்கான்’ ‘வாடிவாசல்’ ’கள்வன்’ ’மார்க் ஆண்டனி’ ’சைரன்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’கள்வன்’ . இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ’லவ் டுடே’ நாயகி இவானா நடித்துள்ளார் என்பதும், மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் சற்றுமுன் வெளியிட்ட நிலையில் அந்த பாடல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
அடி கட்டழகு கருவாச்சி
உன்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வச்சு
கன்னி உன்னை என் கண்ணுக்குள்ள சொக்க வச்சு
பனிமழையா நீ என் மேல படரும் பூஞ்செடியானா நீ
உன்னால வளரனும் வளரனும் மகிழனும்
ஆனந்தத்தில் நான் கொண்டாடனும்