மால டம் டம்… மஞ்சர டம் டம்.. தங்கையுடன் இணைந்து செம ஆட்டம் ஆடும் இந்திய கிரிக்கெட் வீரர்..!

மால டம் டம்… மஞ்சர டம் டம்.. தங்கையுடன் இணைந்து செம ஆட்டம் ஆடும் இந்திய கிரிக்கெட் வீரர்..!

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர் ஒருவர் தனது தங்கையுடன் இணைந்து மால டம் டம்… மஞ்சர டம் டம்.. என்ற பாடலுக்கு செம நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் அய்யர் என்பதும் இவர் சமீப காலமாக அதிரடி ஆட்டம் ஆடி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தனது முழு திறமையும் வெளிக்காட்ட தயாராக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற மால டம் டம்… மஞ்சர டம் டம்.. என்ற பாடலுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அவரது சகோதரி ஸ்ரெஸ்டா அய்யர் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன. இந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா உள்பட ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES