ஓடும் பேருந்தில் 'ரஞ்சிதமே' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய சரத்குமார்... வரலட்சுமி பகிர்ந்த வீடியோ

ஓடும் பேருந்தில் 'ரஞ்சிதமே' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய சரத்குமார்... வரலட்சுமி பகிர்ந்த வீடியோ

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே’ என்ற பாடலுக்கு சரத்குமார் ஓடும் பேருந்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ என்ற பாடலுக்கு 6 வயது முதல் 60 வயது வரையிலான ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம் போடும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இலங்கையில் ஓடும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு செம டான்ஸ் ஆட உள்ளார். இதனை சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. விஜய் ஸ்டைலிலேயே சரத்குமார் ஆடிய நடனத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES