56 வயது ஐபிஎல் பிரபலத்துடன் டேட்டிங் செய்யும் நடிகை சுஷ்மிதா சென்: புகைப்படங்கள் வைரல்!
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியுடன் பிரபல நடிகை சுஷ்மிதா சென் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதாசென் உடன் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் லலித் மோடியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷ்மிதாசென் உடன் லலித் மோடி நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுஷ்மிதா சென் தனது சிறந்த பார்ட்னர் என லலித் மோடி இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இருப்பினும் லலித் மோடி மற்றும் சுஷ்மிதாசென் ஆகிய இருவரும் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் டேட்டிங் மட்டும் செய்து வருகிறார்கள் என்றும் ஆனால் திருமணம் கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகை சுஷ்மிதாசென் கடந்த 1994-ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் என்பதும், இதனை அடுத்து அவர் நாகார்ஜுனா நடித்த ‘ரட்சகன்’ என்ற தமிழ் படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 46 வயதாகும் சுஷ்மிதாசென் இதுவரை திருமணம் செய்யவில்லை. இருப்பினும் அவர் ரோஹ்மான் என்பவரை காதலித்ததாகவும், அதன்பின் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி அதனை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதில் முக்கியமானவர் லலித் மோடி. ஆனால் அதன்பின்னர் பண மோசடி, ஊழல் உள்பட ஒருசில காரணங்களால் அவருக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் லண்டனுக்கு தப்பி சென்றுள்ளார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
56 வயதான லலித்மோடிக்கு ஏற்கனவே மினால் என்பவருடன் திருமணமாகி அதன் பின் சில வருடங்களில் விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.