தாய்லாந்தில் தமன்னா: அட்டகாசமான புகைப்படங்கள் வைரல்
முன்னணி நடிகை தமன்னா தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பதும் அவர் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது தமன்னா தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக தாய்லாந்தில் எடுக்கப்பட்ட பீச் புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சியாக இருப்பதாக கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் தமன்னா தற்போது 3 தெலுங்கு படங்களிலும் 3 இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று அஜித் நடித்த ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’போலோ சங்கர்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.