மகனின் முதல் பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்த பிரபல பாடகி!
தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடிய பாடகி ஸ்ரேயா கோஷல் தனது மகனின் முதல் பிறந்தநாளை அடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரேயா கோஷல், தற்போது மகனின் முதலாவது பிறந்தநாளை அடுத்து பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் ‘நீ எங்களை பெற்றோராக மாற்றி, எங்கள் வாழ்க்கையை மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் அன்பு நிறைந்ததாகவும் மாற்றினாய். இந்த உலகில் அன்புடன் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையான நீ, நேர்மையுடனும் நல்ல உள்ளம் கொண்ட மனிதராக வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.