ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'டான்': டபுள் சென்சுரி அடித்த சிவகார்த்திகேயன்!

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'டான்': டபுள் சென்சுரி அடித்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் திரையுலகையே ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான ’டான்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’டான்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது. இந்த படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

இந்த நிலையில் இரண்டாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் ’டான்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’டாக்டர்’ ’டான்’ என வரிசையாக இரண்டு 100 கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்து சிவகார்த்திகேயன் டபுள் செஞ்சுரி அடித்து உள்ளார் என திரையுலக வட்டாரங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

HOT GALLERIES