வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் சூப்பர் அப்டேட்: அட்டகாசமான ஸ்டில்ஸ்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.
சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் இந்த படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே சிறுமலை என்ற மலைப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இந்த படத்தை தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.