கணவர் சினேகனின் முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னிகா

கணவர் சினேகனின் முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னிகா: வைரல் வீடியோ

நடிகை கன்னிகாவுக்கு அவரது கணவர் சினேகன் முத்தம் கொடுத்த நிலையில் முத்தம் கொடுத்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்ய மாட்டேன் என்றும் கெட்ட வார்த்தைகளில் கமெண்ட்ஸ் வருகிறது என்றும் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல பாடலாசிரியரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சினேகன், கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் சினேகாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் நடிகை கன்னிகா தான் வரைந்த ஓவியத்தை தனது கணவரிடம் காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு சினேகன் உன்னை போலவே அழகாக இருக்கிறது என்று கூறி முத்தம் கொடுக்கிறார். இதனை அடுத்து முத்தம் கொடுக்காதீர்கள், இந்த மாதிரி முத்தம் கொடுக்கும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் போடமாட்டேன், அவ்வாறு போட்டால் பலரும் கேவலமாக திட்டுகிறார்கள், என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES