தோழியின் திருமணத்தில் ராஷ்மிகா மந்தனா: கலர்ஃபுல் புகைப்படங்கள்!

தோழியின் திருமணத்தில் ராஷ்மிகா மந்தனா: கலர்ஃபுல் புகைப்படங்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

பிரபல தெலுங்கு நடிகையும், தமிழில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற திரைப்படத்தில் நடித்தவருமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு 31 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த தனது நெருங்கிய தோழியான ராகினி என்பவரின் திருமணத்தில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை ராஷ்மிகா பதிவு செய்துள்ளார். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது அதிகாலை 4 மணி விமானத்தை தவற விட்டு விட்டதாகவும் அதன் பின் வந்த விமானங்கள் தாமதமாக வந்தாலும் சரியான நேரத்துக்கு திருமணத்திற்கு சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது தோழி திருமண அலங்காரத்தில் அழகாக இருந்ததாகவும் அவரை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES