இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்: 'பீஸ்ட்' எப்போது தெரியுமா?

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்: 'பீஸ்ட்' எப்போது தெரியுமா?

திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு தமிழ் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் .

அந்த வகையில் இந்த வாரம் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக்காகிதம்’ உள்ளிட்ட ஒருசில படங்கள் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. மேலும் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த வார ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

சாணிக்காகிதம்: அமேசான் ப்ரைம்

ஜூண்ட் (இந்தி): ஜீ5

தார் (இந்தி): நெட்பிளிக்ஸ்

நசீர்: சோனிலைவ்

மேன் ஆப் த மேட்ச் (கன்னடம்): அமேசான் ப்ரைம்

டோங்கட்டா (தெலுங்கு) : ஆஹா

தி டேக் டவுன் (ஆங்கிலம்): நெட்பிளிக்ஸ்

மேலும் தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 11ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News