சின்னத்திரை சித்ரா மரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

சின்னத்திரை சித்ரா மரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

சின்னத்திரை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் .

சின்னத்திரை சித்ரா மரணத்திற்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என போலீசார் அவரை கைது செய்தனர் என்பதும் தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் காவல்துறையிடம் சித்ரா மரணம் குறித்து சமீபத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் சித்ரா மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என்றும் பண பலம், அரசியல் பலம் கொண்ட கும்பலால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை காவல் துறை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சித்ராவின் மரணத்திற்கு காரணமான அரசியல்வாதி யார் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்யப்பட்டு வரும் நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, ‘சித்ரா மரணத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறுவிசாரணை நடத்த எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை, உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES