தன்ஷிகாவிற்கு இது முதல்முறை

தன்ஷிகாவிற்கு இது முதல்முறை

பரதேசி, பேராண்மை, கபாலி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகா முதல்முறையாக புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

 

தமிழில் பரதேசி, பேராண்மை, கபாலி ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் படத்திற்கு ‘மனோகரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

 

நவாஸ் அகமது இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

 

தன்ஷிகா

 

இப்படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது கூறும்போது, ‘நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி. சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். 

 

சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கம்பத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES