தெலுங்கில் தடம்பதிக்கும் ஜான்வி கபூர்… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

தெலுங்கில் தடம்பதிக்கும் ஜான்வி கபூர்… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் இவர் முதல் முறையாக தெலுங்கு சினிமா ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து தென்னிந்திய ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை ஸ்ரீதேவி தெலுங்கு சினிமாவிலும் தனது தனி முத்திரையைப் பதித்து இருந்தார். இதற்குப் பின்புதான் அவர் பாலிவுட் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். தற்போது தனது அம்மா வழியிலேயே மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத் தற்போது நடிகர் விஜய்தேவர கொண்டாவை வைத்து "லைகர்" திரைப்படத்தை இயக்கிவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தற்போது அனன்யா பாண்டே நடித்து வருகிறார். முதலில் நடிகை ஜான்வி கபூரையே இந்தப் படக்குழு அணுகியதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ஜான்வி பாலிவுட் சினிமாவில் பிசியாக இருந்ததால் “லைகர்“ படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

ஆனால் இயக்குர் பூரி ஜெகன்னாத் மீண்டும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மற்றொரு பான் இந்தியா திரைப்படத்தை உருவாக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக நடிகை ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு நடிகை ஜான்வி கபூரும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் நடிகை ஜான்வி அறிமுகமாகும் நிலையில் ரசிகர்கள் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES