சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': பிரியங்கா மோகன் கேரக்டர் குறித்து இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': பிரியங்கா மோகன் கேரக்டர் குறித்து இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யா நடித்து முடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி பிரியங்கா மோகனின் கேரக்டர் உள்பட ஒருசில முக்கிய தகவல்களை இயக்குனர் பாண்டிராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் தான் இதற்கு முன்னர் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக ஆக்சன் காட்சிகள் உள்ள திரைப்படம் என்றும் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் ஆகிய இருவருமே திருப்தி அடையும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் நாயகி பிரியங்கா மோகனின் கேரக்டர் பெயர் ஆதினி என்றும் இந்த படத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் கலகலப்பாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நகரம் மற்றும் கிராமம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் பாண்டியராஜனின் இந்த தகவல்களை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இந்த படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

LATEST News

Trending News