அஜித்தின் 'வலிமை' ரிலீஸில் சிறிய மாற்றமா? வெளியான அறிக்கையால் பரபரப்பு!

அஜித்தின் 'வலிமை' ரிலீஸில் சிறிய மாற்றமா? வெளியான அறிக்கையால் பரபரப்பு!

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 12 அல்லது 13 ஆம் தேதி ‘வலிமை’ படம் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படம் ஜனவரி 14ஆம் தேதிதான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

’மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியாகும் திரைப்படங்களின் தேதியை அறிவித்து உள்ளன. அதில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்றும் அதே தினத்தில் பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES