‘டெனெட்’ உடன் ‘மாநாடு’ டீசர் ஒப்பீடு... பெருமையாக உள்ளதாக வெங்கட் பிரபு டுவிட்

‘டெனெட்’ உடன் ‘மாநாடு’ டீசர் ஒப்பீடு... பெருமையாக உள்ளதாக வெங்கட் பிரபு டுவிட்

மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளன்று வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தைப் போல இருப்பதாக கூறி வந்தனர்.

 

வெங்கட் பிரபுவின் டுவிட்டர் பதிவு

 

இந்நிலையில், இதுகுறித்து வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. ஆனால் மாநாடு படத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையிலேயே எனக்கு டெனெட் படம் புரியவில்லை. மாநாடு டிரெய்லருக்காக காத்திருங்கள். அதைப் பார்த்த பின் நீங்கள் வேறு ஏதேனும் ஒரு படத்தோடு ஒப்பிடலாம்” என குறிப்பிட்டுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES