'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய் உடன் ’பைரவா’ மற்றும் ’சர்கார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக விஜய்யுடன் நடிப்பாரா? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். 

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தளபதி 66’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’தளபதி 66’ படத்தின் நாயகி யார் என்பதை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர் ஏற்கப்படுகிறது.

LATEST News

Trending News