குறும்படத்திற்கு பின் அபினய்-பாவனியை வறுத்தெடுத்த கமல்ஹாசன்!

குறும்படத்திற்கு பின் அபினய்-பாவனியை வறுத்தெடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபினய் விவகாரம் கடந்த சில நாட்களாகவே வீட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்து நேற்று கமல்ஹாசன் விசாரணை செய்தார் என்பதும் தெரிந்ததே.

நேற்றைய விசாரணையின்போது பாவனி மற்றும் அபினய்க்கு ஆதரவாக கமல் பேசினார் என்பதும், அதேபோல் ராஜூவுக்கு சில அறிவுரைகளையும் கூறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று திடீரென அதில் திருப்பம் ஏற்பட்டது. ராஜூ கூறிய ஒரு விஷயம் காரணமாக பாவனி மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் ஒரு குறும்படத்தை கமல்ஹாசன் போட்டுக் காட்டுவதாக முந்தைய புரமோவில் பார்த்தோம்.

இந்த குறும்படத்திற்கு பின் பாவனி மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் கமல்ஹாசன் கூறியபோது, ‘இந்த குறும்படம் சொல்வது வேறு செய்தி, இதை யாருமே நேரடியாக பேசவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். நான் பேசுவது மற்றவர்களை பற்றி அல்ல, சம்பந்தப்பட்ட இருவர் சொல்ல வேண்டியதை சொல்லாததால் இந்த குழப்பம் வந்துள்ளது. இந்த பிரச்சனை வீட்டு பிரச்சனையாக மாறியுள்ளது உங்களால் தான்.

நீங்கள் இருவருமே உங்கள் மேல் குற்றம் வராமல் இருக்க இந்த பிரச்சனையை திசைதிருப்பி விட்டீர்களோ என்று தோன்றுகிறது. எனக்கே புரியவில்லை, பாதுகாப்பான விளையாட்டு என்றால் நீங்கள் ரெண்டு பேரும் செய்வது தான்’ என்று கமல் கூறியதை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BiggBossTamil இல் இன்று.. #Day70 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/YhgyvzWKWO

— Vijay Television (@vijaytelevision) December 12, 2021

LATEST News

Trending News