ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பொன்னியின் செல்வன் வீடியோ: இணையத்தில் வைரல்!

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பொன்னியின் செல்வன் வீடியோ: இணையத்தில் வைரல்!

மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்யும் போது எடுத்த வீடியோவை ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் மணிரத்னம் அவர்கள் அந்த பாடலின் காட்சியை விளக்குவதாகவும் அதை டிரம்ஸ் சிவமணி உள்பட தனது இசைக்குழுவினர் கவனத்துடன் கேட்பதாகவும் உள்ள காட்சிகள் உள்ளன 

ஒரு காட்சியை மிகவும் விரிவாக விளக்குவதில் மணிரத்னம் எவ்வளவு பெரிய வல்லவர் என்பதை இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News

HOT GALLERIES