"நான் அதை சீக்கிரமா திருட போறேன்.." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - மஞ்சிமா மோகன் கமெண்ட்..!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மஞ்சிமா மோகன் தற்போது ஜாம் ஜாம் என்ற மலையாளத் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். மஞ்சிமா மோகன் தமிழில் துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே மிக பிரபலமான நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார்.
தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, "அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்', 'தேவராட்டம்' என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் நான்கு படங்கள் உள்ளன.
நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட மஞ்சிமா மோகன் அதைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்பொழுது பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
பல முன்னணி கதாநாயகிகள் கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் மஞ்சிமா மோகன் இதுவரை கவர்ச்சி புகைப்படங்களையும் திரைப்படங்களில் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து "சீக்கிரம் இதை நான் திருட போறேன்.." என்று கீர்த்தி சுரேஷின் நாயை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், நீ திருடினால் கண்டிப்பாக என் நாய் சந்தோஷப்படும் என்று கூறியுள்ளார்.