புதிய அவதாரம் எடுத்துள்ள விக்ரம் மகன் !

புதிய அவதாரம் எடுத்துள்ள விக்ரம் மகன் !

நடிகர் துருவ் விக்ரம் பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்  இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்த நிலையில் இப்போது டப்பிங் பணிகளையும் விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரும் முடித்துள்ளனர். 

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில்  இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய பாடலை பாடியுள்ளார் நடிகர் துருவ் விக்ரம்.

இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நடிகர், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்கள் இப்பாடலுக்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

Dhruv waiting for #Mahaan

LATEST News

Trending News