பைக்கில் அஜித், கார்த்திகேயா: 'வலிமை' படத்தின் அட்டகாசமான ஸ்டில்!

பைக்கில் அஜித், கார்த்திகேயா: 'வலிமை' படத்தின் அட்டகாசமான ஸ்டில்!

தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஸ்டில்களை முன்னணி ஊடகம் ஒன்று கடந்த சில நாட்களாக வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் அஜித் மற்றும் கார்த்திகேயா ஆகிய இருவரும் பைக்கில் ஸ்டைலிஷாக உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் ரேஸ் மற்றும் ஹிட்லரின் நாஜி படைகளின் மீதமிருக்கும் கொள்ளையர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES