தமிழ் சினிமாவில் மச்சான்ஸ் என எல்லோரையும் செல்லமாக அழைத்து தனி வரவேற்பை பெற்றவர் நடிகை நமீதா. ஆரம்பத்தில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் மச்சான்ஸ் என எல்லோரையும் செல்லமாக அழைத்து தனி வரவேற்பை பெற்றவர் நடிகை நமீதா. ஆரம்பத்தில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
ஆனால் அவர் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். ஒருகட்டத்தில் மார்க்கெட் போக சின்ன சின்ன படங்களில் எல்லாம் நடித்து வந்தார்.
பின் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இப்போது உடல் எடையை குறைத்துள்ள நமீதா ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், 10 வருடத்திற்கு முன் தான் அதிகம் சாப்பிட்ட தாகவும் இதனால் தன்னுடைய எடை 97 கிலோ வரை இருந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாராம்.
மேலும், பலரும் எனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதான் இப்படி குண்டாக இருப்பதாக கூறினார்கள். உண்மையில் எனக்கு மாதவிடாய் பிரச்சனையும் தைராய்டு நோயும் இருந்தது.
ஓர் கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எண்ணம் வந்தது. பின்னர் கிருஷ்ணரின் அருளாலும் தியானித்தினாலும் அதில் இருந்து மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார் நமிதா.
A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official)