பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார்.

 

இதுவரை 200-க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிக்கு மகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

LATEST News

Trending News

HOT GALLERIES