திடீரென மாரடைப்பால் உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம்- ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் எல்லா மொழிகளிலும் கலக்கி வரும் ஒரு நிகழ்ச்சி. ஹாலிவுட்டில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி அப்படியே பாலிவுட்டிற்கு வந்தது.
அங்கு நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட், எனவே நிகழ்ச்சி 14வது சீசன் வரை வந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தான் பிக்பாஸ் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தது.
அப்படி மலையாளத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பாடகர் சோமதாஸ். 42 வயதான இவர் நிறைய சினிமா பாடல்கள் பாடியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சை பலன் இன்றி இவர் நேற்று காலை (ஜனவரி 31) உயிரிழந்துள்ளார். இவரது மரணம் ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது.