அழகான சிவப்பு நிற லெகங்காவில் துர்க்கையை பிரதிபலிக்கும் டிடி!
விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம்வருவபர் டிடி. திவ்யதர்ஷினி எனும் இவரது பெயரை ரசிகர்கள் “டிடி“ என்றே அன்போடு அழைத்து வருகின்றனர். விஜய் டிவியில் எவ்வளவோ தொகுப்பாளர்கள் பணியாற்றினாலும் கடந்த 20 வருடத்திற்கும் மேலாக ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்தவராக இருந்துவரும் டிடி சில சினிமாக்களிலும் நடித்திருக்கிறார்.
இதைத்தவிர கதைச் சொல்லல் எனும் Story telling விஷயத்திலும் புதிதாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் இவர் சமீபத்தில் மாலத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளுக்கு சென்ற புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் தற்போது துர்க்கை அம்மனை சிறப்பிக்கும் விதமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவிற்கு தயராகி இருப்பதாகக் கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதில் சிவப்பு லெங்கா அணிந்துள்ள இவர் உண்மையிலேயே துர்க்கை அம்மனை பிரதிபலிப்பது போலவே தோற்றமளிக்கிறார்.
மேலும் பெண்களிடம் உள்ள துர்க்கையை தட்டியெழுப்பாதீர்கள் எனும் மிகச்சிறந்த ஆலோசனையை கேப்ஷனாக கூறிய அவர், சிவப்பு நிறத்தில் துவங்கும் துர்க்கா பூஜை, வலிமை மற்றும் அன்பை வெளிக்காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை கொண்டாடப்படும் இந்த விழா நேற்று (அக்டோபர் 7) விஜயதசமி அக்டோபர் 14 வரை கொண்டாடப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துர்க்கா பூஜையை கொண்டாடும் டிடியின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.