'இதயமே.. இதயமே' உருக வைத்த பாடலாசிரியர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

'இதயமே.. இதயமே' உருக வைத்த பாடலாசிரியர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

நடிகர் முரளி நடித்த ’இதயமே இதயமே’ என்ற பாடல் உள்பட பல பாடல்களை உருக வைக்கும் அளவுக்கு எழுதிய பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினரகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

பாடலாசிரியர் பிறைசூடன் கடந்த 1985ஆம் ஆண்டு ’சிறை’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினிகாந்த் நடித்த ’ராஜாதி ராஜா’ ’மாப்பிள்ளை’ ’பணக்காரன்’ உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். குறிப்பாக ’இதயம்’ படத்தில் அவர் எழுதிய ’இதயமே இதயமே’ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் குடியிருக்கும் பாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 65. பிறைசூடன் அவர்களின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News