நீண்டநாள் காதலரை மணந்தார் 'ஜெய்பீம்' நடிகை: திரையுலகினர் வாழ்த்து!

நீண்டநாள் காதலரை மணந்தார் 'ஜெய்பீம்' நடிகை: திரையுலகினர் வாழ்த்து!

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை லிஜோமால் ஜோஸ். இவர் ஏற்கனவே ;சிவப்பு பச்சை மஞ்சள்; மற்றும் ;தீதும் நன்றும்; ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் ஒருசில மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை லிஜோமால் ஜோஸ் தனது நீண்டநாள் காதலனாக அருண் என்பவரை நேற்று கேரளாவில் உள்ள வயநாட்டில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடந்ததாகவும் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து தமிழ், மலையாள திரையுலகில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES