இரண்டாம் பாகமாக உருவாகிறதா சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படங்கள்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. அதே போல் அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ’ரெமோ’. இந்த இரண்டு படங்களில் ஒன்றை இரண்டாம் பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான பல திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி ஒரு சில படங்கள் வெற்றியும் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அல்லது ‘ரெமோ’ திரைப்படம் இரண்டாம் பாகமாக உருவாகினால் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ’டாக்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் என்பதும் அந்த படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.