ஓடிடியில் வெளியாகிறதா 'ஓ மணப்பெண்ணே'?

ஓடிடியில் வெளியாகிறதா 'ஓ மணப்பெண்ணே'?

கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்ட போதிலும் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஒருசில பிரபலங்களின் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சந்தர் இயக்கியுள்ளார். இந்த படம் தெலுங்கு திரையுலகில் வெளியான ’பெல்லி சூப்புலு’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்தப் படம் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கருக்கு வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News