அமலாவை அடுத்து 30 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் தமிழ் நடிகை!
கடந்த எண்பதுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த அமலா மீண்டும் முப்பது ஆண்டுகளுக்குப் பின் நடிக்க வந்துள்ளார் என்பதும் அவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அமலாவை போலவே 30 வருடங்களுக்கு பின் மேலும் ஒரு பிரபல நடிகையாக இருந்தவர் நடிக்க வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த1987ஆம் ஆண்டு ராமராஜன் நடித்த ’எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷாந்தி. இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பின்னர் பல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நிஷாந்தி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் 1992 ஆம் ஆண்டு ’உயர்ந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த வெப்தொடர் தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொடர் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிஷாந்தி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.