எழுந்து நடமாடும் யாஷிகா: நேரில் சென்று வாழ்த்திய தமிழ் நடிகர்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்தபோது, அவர்கள் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி ரெட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகாவுக்கு கை கால் இடுப்பு போன்ற இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் எழுந்து நடமாட தொடங்கி விட்டார் என தெரிகிறது. தமிழ் நடிகர் அசோக் குமார் என்பவர் யாஷிகாவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் யாஷிகா மற்றும் அவருடைய பெற்றோர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் அவர், ‘பெண் புலி யாஷிகாவை இன்று அவருடைய பெற்றோர்களுடன் சந்தித்தேன். மிகவும் தன்னம்பிக்கையும் உடல்நலத்துடன் யாஷிகா உள்ளார். விரைவில் பூரண குணமடைந்து தான் ஒரு உறுதியான பெண் என்பதை அவர் நிரூபித்துக் காட்டுவார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். மேலும் அவருக்காக ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை காத்திருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுடன் கூடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.