பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு மாஸ் திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் தயாரிப்பில் ஒரு சில படங்கள் உருவாகி வருகிறது என்பதும் அவற்றில் ஒன்று சமுத்திரகனி நடித்த ‘ரைட்டர்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விரைவில் திரை அரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிந்த் வசந்தா இசையில், பிரதீப் ராஜா ஒளிப்பதிவில் மணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

LATEST News

Trending News

HOT GALLERIES