தல அஜித்தின் 'வலிமை' டீசர் அப்டேட்!

தல அஜித்தின் 'வலிமை' டீசர் அப்டேட்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது என்பதும், சிங்கிள் பாடல் வெளியானது என்பதும், அவை மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி அடுத்த வாரம் வலிமை டீசர் உறுதியாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ‘வலிமை’ டீசர் என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES