பிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்?

பிரபல வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'குக் வித் கோமாளி' அஸ்வின்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் அஸ்வின் என்பதும் இவர் தற்போது ’என்ன சொல்லப்போகிறாய்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. டிரைடன்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்து வரும் இந்த படத்தில் அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கோண காதல் கதையான இந்த படம் அஸ்வினுக்கு ஒரு நல்ல திரையுலக எண்ட்ரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி குறித்து குக் வித் கோமாளி அஸ்வின் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கும்கி உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் அஸ்வின் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LATEST News

Trending News

HOT GALLERIES