மீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்!

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் 'நெற்றிக்கண்' நடிகர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் மீண்டும் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

நேரம், பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரிதிவிராஜன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நாயகன், நாயகி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ‘கோல்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க அஜ்மல் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கிய அஜ்மல், அனேகமாக ’கோல்ட்’ படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LATEST News

Trending News

HOT GALLERIES