'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!

'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு தமிழ் திரை உலகில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டிலை வைக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ஏற்கனவே ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைத்திருப்பதால் வடிவேலுவின் படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் ’நாய் சேகர்’ என்ற டைட்டிலை அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’நாய் சேகர்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக அமைந்துள்ளது என்பதும் சதீஷ் மற்றும் நாய் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வடிவேல் சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நடிகர் சதீஷ் அவர்களே, உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது, சிறப்பாக செய்யுங்கள், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். இதற்கு சதீஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES