நடிகை வித்யூலேகாவிற்கு அழகாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்
நீதானே என் பொன்வசந்தம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா ராமன்.
அப்படத்தை தொடர்ந்து தமிழில் காமெடி நடிகையாக வலம் வந்த அவர் தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்து வந்தார். இடையில் தனது உடல்எடையை எல்லாம் குறைத்து அதிரடி காட்டினார்.
வித்யூலேகா கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார். கடந்த சில நாட்களாக திருமண கொண்டாட்டத்தில் இருந்த அவருக்கு உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
அவரது உறவினரான கீதாஞ்சலி செல்வராகவன் திருமண ஜோடியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.