'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தகவலை அறிவித்த விஷால்!
விஷால் நடித்து வரும் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தூ.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என விஷால் தனது டுவிட்டரில் சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் விஷால் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே அக்டோபர் மாதம் விஷால் நடித்த ’எனிமி’ வெளியாக உள்ள நிலையில் 2மாத இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு விஷால் படம் வெளியாக உள்ளது விஷால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். மேலும் விஷால் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துப்பறிவாளன் 2’ படம் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.