தனுஷை அடுத்து 'பீஸ்ட்' படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

தனுஷை அடுத்து 'பீஸ்ட்' படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் டெல்லி மற்றும் ரஷ்யாவில் விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள் மற்றும் இரண்டு தீம் டிராக்குகள் என்றும் ஏற்கனவே இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
மேலும் இந்த படத்தில் உள்ள இரண்டு பாடல்களில் ஒன்றை தனுஷ் எழுதி, பாட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்னொரு பாடலை சிவகார்த்திகேயன் எழுத இருப்பதாகவும் அந்த பாடலை விஜய் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் விரைவில் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News