காதலியை கரம் பிடித்த காதல் பட நடிகர்

காதலியை கரம் பிடித்த காதல் பட நடிகர்

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தில் நடித்த அருண்குமார், தனது காதலியை திருமணம் செய்து இருக்கிறார்.

இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் 'காதல்'. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும் சந்தியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

 

'காதல்' படத்தில் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அருண்குமார் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட சில படங்களிலும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

 

காதலியுடன் அருண்

காதலியுடன் அருண்

 

சில வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News