அஜித் படங்களுக்கு டோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வக்கீல் சாப் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்ய தெலுங்கு திரையுலகினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஷ்ணு விஷாலின் ராட்சசன், அருண் விஜய்யின் தடம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அங்கு ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் அஜித் படங்களுக்கு அங்கு மவுசு அதிகரித்துள்ளது. தற்போது அஜித்தின் வேதாளம், என்னை அறிந்தால் ஆகிய 2 படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.
வேதாளம், என்னை அறிந்தால் படங்களின் போஸ்டர்
வேதாளம் படத்தை சிவாவும், என்னை அறிந்தால் படத்தை கவுதம் மேனனும் இயக்கி இருந்தனர். 2 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. வேதாளம் படம் 2015-ல் வெளியானது. இதில் சுருதிஹாசன், லட்சுமி மேனன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை சமீபத்தில் சிரஞ்சீவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்துக்கு போலா ஷங்கர் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அவருக்கு தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேசும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.