விஜய் சேதுபதிக்காக ஒன்று சேர்ந்த முன்னணி ஹீரோக்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்காக முன்னணி ஹீரோக்கள் பலர் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
அனபெல் சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி - டாப்ஸி
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனபெல் சேதுபதி. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜெய்ப்பூரில் நடந்தது. பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை, சூர்யா, மோகன்லால், வெங்கடேஷ் ஆகிய முன்னணி ஹீரோக்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.