கைக்குழந்தையுடன் நடிகை நயன்தாரா, அருகில் காதலர்? மிரண்டுபோன நெட்டிசன்ஸ்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய கையில் குழந்தை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள் இப்போதுதான் நிச்சயதார்த்தாம் செய்துகொண்டதாகத் தெரிவித்து இருந்தனர். அதற்கு குழந்தையை என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடித்த “ஐயா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்தப் படவே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சொந்த வாழ்க்கையில் ஏராளாமான சிக்கல்களை சந்தித்தார்.
ஆனாலும் மனம்தளராத நடிகை நயன்தாரா மீண்டும் எண்ட்ரி கொடுத்து தற்போது தமிழ் சினிமா உலகையே ஆட்டிப் படைத்து வருகிறார். போதாதக்குறைக்கு தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமே சர்வதேச விருதை வென்று குவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரவுடிதான்“ திரைப்படத்தில் நடித்ததில் இருந்தே நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கருதப்படும் இந்த ஜோடி எப்போதுதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதோடு சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகத் தெரிவித்து மோதிரத்தைக் காண்பித்து இருந்தார். இந்தத் தகவலை கேட்ட ரசிகர்கள் திக்குமுக்காடி போனதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும்போது நடிகை நயன்தாரா தன்னுடைய கையில் ஆண் குழந்தை ஒன்றை வைத்துக்கொண்டு இருப்பது போலவும் அந்த குழந்தையை இயக்குநர் விக்னேஷ் சிவன் பரிவோடு தொடுவது போன்றும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை நெட்டிசன்கள் பதறிப்போய் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் ஒருவேளை இந்தக் குழந்தை படத்தில் நடிக்கும் வேடமா அல்லது நடிகை நயனின் அண்ணனின் குழந்தையா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.