சூர்யாவை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சிவகார்த்திகேயன்

சூர்யாவை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களுக்கு உதவும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியாவிற்கு உதவ இருக்கிறார்.

 

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

 

அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3ஆம் தேதி சூர்யா வெளியிட்டார்.

 

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா படக்குழுவினர்

 

தற்போது இப்படத்தின் டீசரை ஆகஸ்ட் 27ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாலை 5.30 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES