சியான் 60 படத்தின் தலைப்பு இதுதானா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் சியான் 60.
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக முழுவீச்சில் நடைபெற்று வந்த சியான் 60 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
வரும் 20ஆம் தேதி இப்படத்தின் First லுக் வெளியாகவுள்ள நிலையில், சீயான் 60 படத்திற்கு, 'மஹான்' எனும் தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம், நாளை வெளியாகும் First லுக், இந்த தலைப்புடன் வெளியாகிறதா என்று..
இதையும் படியுங்கள் : சித்தி 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வாணி ராணி சீரியல் நடிகை.. அட, இவரா.. ரசிகர்கள் கொண்டாட்டம்