பதவியேற்றவுடன் நடிகர் வாகை சந்திரசேகரின் முதல் அதிரடி அறிவிப்பு!
நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு சமீபத்தில் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவி அளிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து மரியாதை நிமித்தமாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை வாகை சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று காலை நடிகர் வாகை சந்திரசேகர் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக அதிகார பூர்வமாக பொறுப்பேற்றார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த நிலையில் தமிழகத்தின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியை ஏற்ற நடிகர் சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆனால் கடந்த 10 ஆண்டில் அரசின் கணக்கெடுப்பில் 40 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டுமே உள்ளதாக விபரங்கள் உள்ளது என்றும் இதனை திருத்தி மீதமுள்ள அனைவருக்கும் அரசு சலுகைகள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியேற்ற உடனே அவர் அறிவித்த இந்த முதல் அறிவிப்பு அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.